உலக மாற்றுத்திறனாளிகள் தினம்- பசுமையான கோவையை உருவாக்க மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு...

published 1 day ago

உலக மாற்றுத்திறனாளிகள் தினம்- பசுமையான கோவையை உருவாக்க மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு...

கோவை: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பசுமை கோவையை உருவாக்குவது வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன பேரணி மேற்கொண்டனர்.

உலக மாற்றுத்திறனாளி தினமான இன்று பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், அவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் பசுமையான கோவையை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தும் வகையில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களில் பேரணி மேற்கொண்டனர். சிவானந்தாகாலனி பகுதியிலிருந்து 100 அடி சாலை வரை இந்த பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை மாநகர காவல் துணை ஆணையாளர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இப்பேரணியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் மரம் வளர்ப்போம், பிளாஸ்டிக் தவிர்ப்போம், போதை பொருட்களை ஒழிப்போம் என்பது போன்ற பசுமையை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை வாகனங்களில் பொருத்தியவாறு சென்றனர்.

பசுமையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மேற்கொண்ட பேரணி பொதுமக்களை கவர்ந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe