கோவையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன் உதிரிபாகம் திருட்டு…

published 12 hours ago

கோவையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன் உதிரிபாகம் திருட்டு…

கோவை: கோவையில் விவசாய நிலங்கள், தனியார் கட்டிடங்களில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர்கள் வாடகை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. 

இதேபோல், சுக்கிரவார் பேட்டையில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஏர்டெல் செல்போன் டவர் உள்ளது. இந்த நிறுவனம் தனது சேவையை நிறுத்தி விட்டதால் டவர் பயன்பாடின்றி கிடந்தது. இதற்கிடையே இந்த நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் உதிரிபாகங்கள் அடிக்கடி திருடு போவதாக நிறுவன அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார் வருகிறது. 

அதன்பேரில், அவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், சுக்கிரவார் பேட்டையில் உள்ள கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த செல்போன் டவரை சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ரூ. 2 லட்சம் மதிப்பிலான உதிரிபாகம் திருடு போயிருப்பது தெரியவந்தது. 

இது குறித்து அந்த நிறுவன அதிகாரி அர்ஜூனன்(49) என்பவர் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe