கோவையில் மூன்று நாட்களுக்கு அதிக கன மழை- 1977ம் ஆண்டுக்குப் பிறகு நடக்கும் நிகழ்வு என கோவை வெதர்மேன் கணிப்பு...

published 3 days ago

கோவையில் மூன்று நாட்களுக்கு அதிக கன மழை- 1977ம் ஆண்டுக்குப் பிறகு நடக்கும் நிகழ்வு என கோவை வெதர்மேன் கணிப்பு...

கோவை: கோவை வெதர்மேன் என்றழைக்கப்படும் சந்தோஷ் கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் , புயல் சின்னம் பாண்டிச்சேரியை கடந்து கோவைக்கு வருவது போல் உள்ளது என்றும் 1977 ஆம் ஆண்டுக்கு பிறகு கொங்கு மண்டலம் வழியாக இந்த புயல் சின்னமானது பயணிக்கப் போவதாக தெரிவித்தார். 

இதன் மூலம் கொங்கு பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம், குறிப்பாக கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி நாமக்கல் சேலம் கரூர் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார். 15 சென்டிமீட்டரில் இருந்து 25 சென்டிமீட்டர் வரை மழையை எதிர்பார்க்கலாம் என்றார்.

பொதுவாகவே கொங்கு மண்டலத்தின் வழியாக புயல்கள் பயணிக்காது என தெரிவித்த அவர் இது மிகவும் அரிதான நிகழ்வு என கூறினார். குறிப்பாக நீலகிரி பகுதிகளில் அதீத கன மழை இருக்கும்  30 முதல் 40 சென்டிமீட்டர் வரையிலான மழையை கூட எதிர்பார்க்கலாம் என கூறினார். மேலும் நீலகிரியில் வெள்ளம் நிலச்சரிவு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம் எனவும் டிசம்பர் 1ம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நீலகிரி செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். 

மேலும் கோவை மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆனால் சென்னை அளவிற்கு வெள்ளம் வருவதற்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்தார். மேலும் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

வானிலை ஆய்வு மையம் இந்த பகுதிக்கு புயல் வருவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியிருப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் வானிலை ஆய்வு மையம் எப்பொழுதும் கடலோரப் பகுதிகளுக்கு தான் முதல் எச்சரிக்கை விடுவார்கள், கடலோர மாவட்டங்களில் அதிக கன மழை இருக்கும் பட்சத்தில் கோவைக்கு வரும்பொழுது சற்று குறைந்து விடும் என தெரிவித்தார். இங்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தான் அந்த புயலானது வரும் 30 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.

புவி வெப்பமயமாதல் ஆகியவை இந்த புயலின் வலுவை அதிகரிப்பதாக கூறினார். மேக வெடிப்பு என்பது தென்மேற்கு பருவமழை காலங்களில் அதிகம் நடைபெறும் எனவும் வடகிழக்கு பருவ மழையை பொருத்தவரை புயலின் சலனங்கள் வைத்து தான் மழைப்பொழிவு இருக்கும் என தெரிவித்தார். 

தற்பொழுது உள்ள சூழலைப் பொறுத்தவரை காலையிலிருந்து தொடர்ச்சியாக மழை இருக்கலாம் எனவும் 48 மணி நேரத்தில் சுமார் 20 சென்டிமீட்டர் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe