கோவையில் கள்ளத் துப்பாக்கியை பறிமுதல் செய்த தீவிரவாத தடுப்பு பிரிவு போலிசார்...

published 19 hours ago

கோவையில் கள்ளத்  துப்பாக்கியை பறிமுதல் செய்த தீவிரவாத தடுப்பு பிரிவு போலிசார்...

கோவை: கோவையில் பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வினோபாஜி நகர் பகுதியில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலிசார் ஒருவர் சோதனையில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது மூன்று இளைஞர்களிடம் ஒரு துப்பாக்கி மற்றும் குண்டுகள் இருந்தது தெரியவந்துள்ளது. 

பின்னர் அவர்களை பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற விசாரித்த போது அவர்களின் பெயர் மணிகண்டபிரபு (கோவை), ஹரிஸ் (காளப்பட்டி), குந்தன்ராஜ்(பாட்னா) பகுதியை சேர்ந்த இளைஞர்கள் என தெரியவந்தது.

அவர்களிடம் இருந்தது ஐ.டி ஊழியருக்காக பீகாரில் இருந்து வாங்கி வரப்பட்ட கள்ளத் துப்பாக்கி  மற்றும் 6 குண்டு என்பதை அறிந்த போலிசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

ஐ.டி ஊழியர் மணிகண்ட பிரபு என்பவருக்காக ஹரிஷ் என்பவரும், கோவையில் வசிக்கும் பீகாரை சேர்ந்த குந்தன்ராஜ் என்பவரும் கள்ள துப்பாக்கியை வாங்கி உள்ளனர்.
பீகார் சென்று துப்பாக்கி வாங்கி வந்த நிலையில், தகவல் அறிந்த தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து 3 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe