கோவையில் BT, BRTE தேர்ச்சி பெற்றவர்கள் மனு- கோரிக்கை என்ன?

published 16 hours ago

கோவையில் BT, BRTE தேர்ச்சி பெற்றவர்கள் மனு- கோரிக்கை என்ன?

கோவை: பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான கலந்தாய்வினை உடனடியாக நடத்தி பணி நியமன ஆணைகளை வழங்க வலியுறுத்தி BT, BRTE தேர்ச்சி பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு பள்ளி காலி பணியிடங்களாக உள்ள 3197 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டு 2024 ஆம் ஆண்டுக்குப்ரவரி மாதம் தேர்வு நடத்தியது என குறிப்பிட்டனர். மேலும் அந்த தேர்வு முடிவுகளில் தேர்ச்சி அடைந்த நிலையில் தற்பொழுது வரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை எனவும் ஆனால் தங்களுடன் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு தேர்வாகிய ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து விட்டதாக தெரிவித்துள்ள BT- BRTE தேர்ச்சி பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்பொழுது பள்ளிகளில் தேர்வு காலம் என்பதால் தனியார் பள்ளிகளிலும் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் உடனடியாக தமிழ்நாடு அரசு கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe