பொங்கல் பரிசுத்தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு!

published 1 week ago

பொங்கல் பரிசுத்தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு!

கோவை: 2025ம் ஆண்டுக்காக பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய: தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு எப்படி? 🎋🍚  வாசகர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்  https://whatsapp.com/channel/0029VaBGFq7JZg4EvHELBx3R/586  NewsCloudsCoimbatore

இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe