சாட்டையால் அடித்துக் கொள்வேன்- இனி செருப்பு போடமாட்டேன்- கோவையில் அண்ணாமலை பேட்டி!

published 1 week ago

சாட்டையால் அடித்துக் கொள்வேன்- இனி செருப்பு போடமாட்டேன்- கோவையில் அண்ணாமலை பேட்டி!

கோவை: கோவை: தி.மு.க. அரசை கண்டித்து நாளை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்ள உள்ளதாகவும், தி.மு.க-வை ஆட்சியில் இருந்து அகற்றமாட்டேன் என்றும் கோவையில் செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார்.

கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத தி.மு.க. அரசைக் கண்டித்து நாளை முதல் பா.ஜ.க.வினர் தங்களது வீட்டின் முன்பு நின்று போராட்டம் நடத்துவார்கள்.

அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாம் அனைவரும் வெட்கித்தலை குனிய வேண்டிய நிகழ்வு, இதற்காக நாளை காலை கோவையில் உள்ள எனது இல்லம் முன்பு நின்று ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொள்ள உள்ளேன்.

அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை எப்படி யாரால் வெளியிடப்பட்டது? போலீசார் வெட்கப்பட வேண்டும்.

அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், கைபேசி எண், குடும்ப விவரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளியிடக்கூடாது என கூறப்பட்டிருந்தும் காவல்துறையினர் இது போன்று பெண்களுக்கு எதிரான செயல்களை செய்கின்றனர்.

மிகவும் மோசமான வகையில் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்தில் உரிய சிசிடிவி கண்காணிப்பு கூட பொருத்தப்படவில்லை, ஒரு பெண் மட்டுமல்லாமல் பலரையும் அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்திருப்பார் என சந்தேகிக்கப்படுகிறது.

அந்த நபர் துணை முதல்வர் உட்பட பல்வேறு அமைச்சர்களோடு புகைப்படம் எடுத்து நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அவர் மீது உடனடியாக சார்ஜ் சீட் பதிந்து, நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று உரிய தண்டனை வழங்கிட வேண்டும்.

சமூக நீதி, சமத்துவம், பெண்களை முன்னேற்றும் அரசு எனக் கூறிக் கொள்ளும் தி.மு.க. அரசு பெண்களுக்கு எந்த விதமான பாதுகாப்பையும் வழங்கவில்லை என்பது தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை இப்போதிலிருந்து செருப்பு அணிய மாட்டேன். 48 நாட்கள் விரதம் இருந்து முருகனிடம் முறையிடப்போகிறேன்.

முருகனின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்து திமுகவிற்கு எதிரான அரசியலை மிக தீவிரமாக முன்னெடுக்க உள்ளோம். என தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும், அண்ணாமலை தான் அணிந்திருந்த ஷூவை கழற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe