கோவை மெட்ரோ குறித்து பல்வேறு தகவல்களை அளித்த மெட்ரோ மேலாண்மை இயக்குநர்...

published 1 week ago

கோவை மெட்ரோ குறித்து பல்வேறு தகவல்களை அளித்த மெட்ரோ மேலாண்மை இயக்குநர்...

கோவை: கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் மெட்ரோ திட்டம் தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர்  எம்.ஏ.சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், கோவை மாநகர பகுதியில் அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ளது, தற்கான ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது என தெரிவித்தார்.  

கோவை மெட்ரோ ரயில் திட்டம்  10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாராகி உள்ளது எனவும் இதில் சத்தியமங்கலம் சாலையில் முதல் தளமாக மேட்டூரில் திட்டம் அமையும் எனவும் அவிநாசி சாலையில் நெடுஞ்சாலை துறையினரின் பாலங்கள் இருக்கும் இடத்தில் இரண்டாம் தளமாக அதைவிட உயரத்தில் ஆங்காங்கே மெட்ரோ ரயில் பாலம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.  

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக  பத்து ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது என கூறிய அவர் நீலாம்பூர் பகுதியில் டிப்போ அமைப்பதற்கு தனியாக 16 ஹெக்டர் நிலம் தேவைப்படும் என்றார். இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் அடுத்தடுத்து நடைபெறும் என தெரிவித்தார்.

கோவை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கான ஒப்புதல்கள் மத்திய அரசிடமிருந்து கிடைக்கப்பெற்றதும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்  பணிகள் முடிக்கப்படும் என்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் பூமிக்கு அடியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது  என கூறினார்.  மதுரையை விட கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக முடிவடையும் என கூறினார். கோவை , மதுரை ஒருங்கிணைந்த திட்டமாக தயாரித்து வருகிறோம் எனவும் நிலம் எடுப்பதில் தேவையான பணிகளை செய்து வருகிறோம் என கூறினார். மெட்ரோவிற்கான இடத்தின் தேவை குறைக்க திட்டமிட்டு உள்ளதாகவும்  இடம் எடுப்பவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கபடும் என்றார். மேலும்  அவிநாசி மேம்பாலம் புதிய அறிவிப்பு மனதில் வைத்து திட்டமிடுவோம். மேலும் 
வருங்காலம் மனதில் வைத்து மெட்ரோ அவிநாசி சாலை ஒட்டி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிலோ மீட்டர் வரை மெட்ரோ பாதை அமைகிறது என்றார். மேலும் பேருந்து நிலையம் , விமான நிலையம், இரயில் நிலையம் ஒருங்கிணைத்து வர கூடிய இடத்தில் அமைய வேண்டும் என்பது தான் திட்டத்தின் நோக்கம் என தெரிவித்தார்.

ரெகுலர் மெட்ரோ தான் கோவைக்கான திட்டம் தான் எனவும் 3 கோச் என்ற அளவில் சுமார் 700 பேர் வரை பயணிக்கும் அளவிற்கு திட்டமிட்டுள்ளோம்  என்றார். கோவையில் முடிந்த பிறகு மதுரை முடியும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe