எங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம்- சோமையம்பாளையத்தில் கையெழுத்து இயக்கம்...

published 3 days ago

எங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம்- சோமையம்பாளையத்தில் கையெழுத்து இயக்கம்...

கோவை: கோவை மாவட்டத்தில், சோமையம்பாளையம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ”வேண்டும் ஊராட்சி, வேண்டாம் மாநகராட்சி ” என அப்பகுதி பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.


கோவை, கஸ்தூரி நாயக்கன்பாளையம், சோமயமைப்பாளையம், காளப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை - எளிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைப்பதால் அப்பகுதி கூலித் தொழிலாளிகளுக்கு கிடைக்கும் 100 நாள் வேலை ரத்து செய்யப்படும் எனவும், ஏழை - எளிய மக்கள் வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு உள்ளிட்ட பல இன்னல்களுக்கு ஆளாகக் கூடிய நிலை ஏற்படும் என்றும் கிராம பஞ்சாயத்திற்கு வழங்கப்படும் இலவச குடிநீர் உள்ளிட்டவை கிடைக்காமல் போய்விடும் எனவும், வியாபாரிகளின் கடை வரி மற்றும் பத்திரப் பதிவு கட்டணம் பல மடங்கு உயரும், வீடுகள் கட்ட கட்டிட அனுமதி உள்ளிட்டவை உயர்த்தப்படும் என்றும், விவசாய கூலித் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு திட்டங்கள் மாநகராட்சியில் வசிப் போருக்கு கிடைக்காது. 

மேலும் ஊராட்சிக்கு கிடைக்கப்பெறும் மத்திய, மாநில அரசின் அனைத்து மானியங்களும் ரத்து செய்யப்படும் போன்ற பிரச்சினைகள் மக்களுக்குச் சுமையாக அமையும் என்பதால்  ”வேண்டும் ஊராட்சி வேண்டாம் மாநகராட்சி  என விழிப்போடு செயல்பட வேண்டும் என்றும் ஒற்றுமையோடு போராடுவோம்." எனக் கூறி தற்பொழுது கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் உள்ள விநாயகர் கோயில் பகுதியில் கையெழுத்து இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அப்பகுதி பொதுமக்கள் . மேலும் நாளை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe