கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இயேசு பிறப்பை அறிவித்தார் கோவை மறை மாவட்ட ஆயர்...

published 2 weeks ago

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இயேசு பிறப்பை அறிவித்தார் கோவை மறை மாவட்ட ஆயர்...

கோவை: கிறிஸ்துவ மக்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேட் ஆலயத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மேலும் ஆலயத்திற்குள் நடைபெறும் திருப்பலி ஆராதனை நிகழ்வை அனைவரும் காண்பதற்கு எல்.இ.டி திரை வசதியும் செய்யப்பட்டிருந்தது.

12 மணி அளவில் கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினாஸ் இயேசு கிறிஸ்துவின் உருவபொம்மையை காண்பித்து இயேசு பிறப்பை அறிவித்தார். தொடர்ந்து குடிலில் இயேசு கிறிஸ்து வைக்கப்பட்டு சிறப்பு திருப்பலி, ஆராதனை நடைபெற்றது.

இங்கு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு நிகழ்வினை மெய்மறந்து இயேசுவை பிரார்த்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe