எல்.ஐ.சி வேலைவாய்ப்பு: 200 பணியிடங்கள்... உடனே விண்ணப்பிங்க!

published 5 months ago

எல்.ஐ.சி வேலைவாய்ப்பு: 200 பணியிடங்கள்... உடனே விண்ணப்பிங்க!

எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 200 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 200 ஜூனியர் அஸ்சிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது.  

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். பள்ளி அல்லது கல்லூரியில் கணினி குறித்த பாடப்பிரிவை ஏதேனும் ஒரு பாடமாக படித்து இருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உண்டு. (கல்வி தகுதி பற்றிய  விவரங்களை அறிவிப்பில் படிக்கவும்)

மாதம் ரூ.32,000 - 35,000 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில், நெல்லை, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் தேர்வு நடக்கும். ஆன்லைன் வழியாக தேர்வு நடைபெறும். தேர்வு  செப்டம்பர் மாதம் நடத்தப்படலாம்.

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும்.  விண்ணப்பிக்க வரும் 14.08.2024 கடைசி தேதி.  தேர்வு அறிவிப்பினை படிக்க லிங்கை க்ளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe