தொடர்ந்து சிவப்பு நிற ஆடையில் 'தங்கலான்' நாயகி... காரணம் என்ன?

published 3 months ago

தொடர்ந்து சிவப்பு நிற ஆடையில் 'தங்கலான்' நாயகி... காரணம் என்ன?

நடிகை  மாளவிகா மோகனன் தங்கலான் புரமோஷன் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து சிவப்பு நிற உடையில் சென்று வருவது கவனம் பெற்றுள்ளது.

நடிகர் விஜய்  உடன்  மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்தார்.  இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். தற்போது தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தங்கலான் உருவாகி உள்ளது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்துள்ளார். படம் நாளை (ஆகஸ்ட் 15) திரைக்கு வர உள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள்  தீவிரமாக நடந்து வருகிறது.

படத்தில் மாளவிகா மோகனன் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாப்பாத்திரத்திற்காக இவர், சிலம்பம் பயிற்சி முதல் உடல் எடை குறைவது வரை  மிகவும் மெனெக்கட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.  

தங்கலான் படத்தில் மேலாடை இல்லாமல் இவர் நடித்துள்ளதால், திரையில் அவர் வரும் காட்சிகள்  சிவப்பு நிறமாக காட்டப்பட்டு இருக்கும். எனவே சிவப்பு நிறத்தை பிரதிபலிக்கும் வகையில், தங்கலான் பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு  சிவப்பு நிற உடையில் வருகிறார் என தகவல்கள் கூறுகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe