கோவை மாநகரில் 700 விநாயகர் சிலைகள்!

published 1 week ago

கோவை மாநகரில் 700 விநாயகர் சிலைகள்!

கோவை: விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதனையொட்டி இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் அனுமதி பெற்ற இடங்களிலும், பொதுமக்கள் தங்களது வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர்.

இந்து அமைப்புகள் சார்பில் கோவை மாநகரில் சுமார் 700 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. புறநகர் பகுதியில் உள்ள சிலைகள் வரும் 9ம் தேதியும், நகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் 11ம் தேதியும் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.

அதன்படி, முத்தண்ணன் குளம், பவானி ஆறு (சிறுமுகை, எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் கோயில், தேக்கம்பட்டி), அம்பராம்பாளையம் ஆறு, நொய்யல் ஆறு, ஆச்சான் குளம், நீலாம்பூர், உப்பாறு (ஆனைமலை முக்கோணம் அருகில்), நடுமலை ஆறு (வால்பாறை), சாடிவயல், வாளையார் அணை,

குறிச்சி குளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளம், வெள்ளக்கிணறு குளம் மற்றும் நாகராஜபுரம் குளம் ஆகிய 14 இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

தவிர, திருப்பூர் மாவட்டம் செஞ்சேரி பிரிவு பிஏபி வாய்க்கால், சாமளாபுரம் குளம், பிஏபி வாய்க்கால், கெடிமேடு பகுதியில் சிலைகளை கரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா அமைதியாக நடைபெற போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலை வைத்த இடங்களில் போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.

உங்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை புகைப்படங்களை எங்களுக்கு 99444 38011 என்ற எண்ணில், விவரங்களுடன் மாலை 7 மணிக்குள் வாட்ஸ்-ஆப் செய்யுங்கள்.

சிறந்த புகைப்படங்களை தொகுத்து வழங்குகிறோம் -NewsClouds

காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe