போலி பாஸ்போர்ட் மூலம் கோவை வந்த பெண் கைது- பாஸ்போர்ட் தயார் செய்தவர் தப்பி ஓட்டம்...

published 2 weeks ago

போலி பாஸ்போர்ட் மூலம் கோவை வந்த பெண் கைது- பாஸ்போர்ட் தயார் செய்தவர் தப்பி ஓட்டம்...

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு பல்வேறு வெளி நாடுகளில் இருந்து தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன .இதில் ஆயிரக் கணக்கான பயணிகள் கோவைக்கு வருகின்றனர். 

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள், அவர்கள் வைத்து இருந்த ஆவணங்களை சோதனை செய்தனர். இப்போது ஒரு பெண் போலி பாஸ்போர்ட்டில் வந்து இருந்தது தெரியவந்தது. உடனே அந்த பெண்ணை பிடித்து பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர் . 

போலீசார் அந்த பெண்ணிடம் நடத்தி விசாரணையில் ஆந்திராவைச் சேர்ந்த கந்தசாலா கனகதுர்கா (36 ) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் நாகேஸ்வரராவ் என்பவர் போலி பாஸ்போர்ட்டை தயார் செய்து தன்னை விமான மூலம் அழைத்து வந்ததாகவும் விமான நிலையத்தில் இருந்து அவர் தப்பி சென்று விட்டதாகவும் கூறி இருக்கிறார் .

தொடர்ந்து பிடிப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகேஸ்வரராவை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe