மருதமலையில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்...

published 1 week ago

மருதமலையில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்...

கோவை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்புகளை நிறைவேற்றும் படி இன்று கோவையில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சாமி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் துறை அமைச்சர் சேகர் பாபு, அரசு தலைமை செயலர் முருகானந்தம் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவு அளிக்கும் அன்னதான திட்டத்தை தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் விரிவுபடுத்திடும் வகையில் கோவை மாவட்டத்தில்  ஆனைமலை போன்ற தமிழகத்தில் அமைந்து உள்ள கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இந்த  திட்டத்தை துவக்கி வைத்ததற்காக  கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் நன்றி தெரிவித்தார். இதற்கு முன்னர் மருதமலை திருக்கோயிலில் நடைபெற்று வந்த அன்னதான திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 100 பக்தர்கள் பயனடைந்து வந்த நிலையில் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ள இந்த திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு லட்சக் கணக்கான பக்தர்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்திய தமிழக அரசுக்கு நன்றிகளை அவர் தெரிவித்தார்.  

தற்போது வரை 11 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 760 திருக்கோயில்களில் 1 வேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 3 கோடியே 36 லட்சம் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe