இலங்கை, பர்மாவில் இருந்து வந்தவரா நீங்கள்: கோவை ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ?

published 2 weeks ago

இலங்கை, பர்மாவில் இருந்து வந்தவரா நீங்கள்: கோவை ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ?

கோவை: இலங்கை, பர்மா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து தாயகம் திரும்பியோர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு கடன்களுக்கு அடமானமாக நில ஆவணங்கள், கடவுசீட்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் பெறப்பட்டது. 

மேற்படி கடன்கள் தள்ளுபடி செய்து அடமான ஆவணங்களை தாயகம் திரும்பியோர்க்கு திரும்ப ஒப்படைக்க அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையருக்கு அதிகாரம் வழங்கி இவற்றை நடைமுறைப்படுத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுக்கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நில ஆவணங்கள், கடவுச்சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் அனைத்தையும் அவற்றில் உள்ள கடன் வழங்கப்பட்டது தொடர்பான விவரங்கள் அனைத்தையும் நீக்கி விட்டு, சம்பந்தப்பட்ட தாயகம் திரும்பியோர்களிடம் அனைத்து ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க அரசு அறிவுரை வழங்கியுள்ளது. 

எனவே சம்பந்தப்பட்ட பயனாளிகள் தகுந்த ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறைஎண்-19, தனிவட்டாட்சியர், இலங்கை தமிழர் நலன் பிரிவு அல்லது தாங்கள் கடன் பெற்ற வருவாய் கோட்ட அலுவலர் (RDO) அலுவலகத்தினை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe