பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் வழங்கப்படுமா மாட்டாதா? அமைச்சர் விளக்கம்!

published 1 week ago

பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் வழங்கப்படுமா மாட்டாதா? அமைச்சர் விளக்கம்!

கோவை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு இல்லாத நிலையில், இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக சர்க்கரை, கரும்பு, பச்சரிசி மற்றும் வேட்டி சேலைகள் வழங்கப்படுவது வழக்கம். அதோடு, பொதுமக்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அப்போதைய நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு சார்பில் வழங்கப்படும்.

இந்த நிலையில், 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகுப்பு அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதில், பொங்கல் பரிசுத் தொகுப்பாக அரிசு அட்டை குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்றும், இலவச வேட்டி சேலைகள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரொக்கம் வழங்குவது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், பணம் வழங்கப்படாதது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த ஆண்டு புயல், மழையால் பேரிடர் ஏற்பட்டது. இதற்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.37,000 கோடி பேரிடர் நிதி கோரப்பட்டது. ரூ.276 கோடி மட்டுமே ஒதுக்கியது.

தற்போது வரை மாநில நிதியிலிருந்து ரூ.2,028 கோடி பேரிடருக்காக செலவிட்டுள்ளோம். இந்த சூழல் மாறும். என்று தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe