கோவை கவுன்சிலர்கள் எங்களுக்கு பாதுகாப்பாக நிற்க வேண்டும்- தமிழ்நாடு சிறு, குறு தொழில் முனைவோர் சங்கம் கோரிக்கை…

published 4 days ago

கோவை கவுன்சிலர்கள் எங்களுக்கு பாதுகாப்பாக நிற்க வேண்டும்- தமிழ்நாடு சிறு, குறு தொழில் முனைவோர் சங்கம் கோரிக்கை…

கோவை: கோவையில் இன்று தமிழ்நாடு  கைத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் கூட்டமைப்பு (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, 

இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் சிறு, குறு தொழில் செய்வோர் அதிகம் பேர் உள்ளனர். இதில் 3 வகை தொழில் முனைவர் உள்ளனர். 
ஏற்கனவே மின்சார கட்டணம் எங்கள் வாழ்வில் மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.  மின்சார வாரியத்தால் 460 சதவீதம் உயர்த்திய நிலை கட்டணத்தை செலுத்துவதற்கு நாங்கள் தடுமாறி வருகிறோம். 
இந்த நிலையில் 18 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பு பெற்ற தொழில் முனைவோர்களுக்கு எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் பின் கட்டணத்தில் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை அபராத கட்டணமாக செலுத்த கூறி உள்ளதனால் தொழில்கள் முடங்கி வரும் நிலையில் கோவை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம், கைத் தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர்கள் நிறுவனங்களுக்கு சென்று விண்ணப்பத்தை கொடுத்து அவர்களிடம் தொழில் நிறுவனம் தொடங்கியது. 

முதல் தொழில் வரி மற்றும் ரன்னிங் லைசன்ஸ் கட்டணம்கட்ட வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் நாங்கள் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். 10 ரூபாய் வருமானம் என்றால் 11 ரூபாய் வரி போன்ற வகைகளுக்கு செலுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த வரி விதிப்பின் முன்பு அனைவரையும் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தோம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. வரி விதிப்பை முறைப்படுத்த வேண்டும். தொழில் முனைவோரை மிரட்டுவது போல் செய்யக் கூடாது. எனவே இந்த பிரச்சனையில் தீர்வு ஏற்படுத்த   மாநகராட்சி மேயர் உள்ளிட்ட 100 கவுன்சிலர்களும் எங்களுக்கு பாதுகாப்பாக துணை நிற்க வேண்டும். 

வருகிற 21 ஆம் தேதி பெரும் திரள் சந்திப்பு இயக்கம் நடத்த உள்ளோம். அனைவரும் மாநகராட்சி ஆணையரை அலுவலகத்தில் சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை கோரி பெரும் திரள் சந்திப்பு இயக்கம் மூலம் வலியுறுத்து உள்ளோம். இதில் கோவை மாநகராட்சியின் கவுன்சிலர்கள் அனைவரும் பங்கேற்க அவர்களுக்கு அனைவருக்கும் வீடுகளுக்கு தபால் அனுப்பி உள்ளோம். அவர்களும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம்.இவ்வாறு தலைவர் ஜேம்ஸ் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe