அழகா.. அழகா.. 'செல்பி' எடுக்க வகை..வகையா டிப்ஸ் கொடுக்கிறோம் வாங்க.. !

published 1 year ago

அழகா.. அழகா.. 'செல்பி' எடுக்க வகை..வகையா டிப்ஸ் கொடுக்கிறோம் வாங்க.. !

"நம்ம அழகா இருக்கணும்… அழகா தெரியனும்.." அப்டின்னு யாருக்கு தாங்க ஆசை இல்லை.? சிலர் 'போட்டோ ஜெனிக் ஃபேஸ்' அப்படின்னு சொல்றது நம்ம கேள்விப்பட்டிருப்போம். அப்படினா, நேர்ல பார்ப்பதை விட புகைப்படத்துல அழகா தெரியுறாங்கன்னு அர்த்தம். நம்ம அழகா இருந்தாலும், கொஞ்சம் அழகுக்கு கொறச்சல் இருந்தாலும், சில டிப்ஸ் யூஸ் பன்னுறது மூலமா அழகா காட்டிக்க முடியும்.

ஒரு செல்பி எடுக்குறதுக்கு முன்னாடி நம்ம முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கு. அத தாங்க நம்ம இந்த தொகுப்பில் தெரிஞ்சுக்க போறோம்...

நம்ம புகைப்படம் எடுக்கும் பொழுது வெளிச்சம் மிக முக்கியமான ஒன்று. வெளிச்சம் நம்ம முகத்துல விழுகுற மாதிரி புகைப்படம் எடுத்தால் நம்மளுடைய முகம் பிரகாசமாக தெரியும். வெளிச்சம் நம் பின்னால் இருக்கும் பொழுது நம் முகத்தில் நிழல் விழுந்து நம் முகம் கருப்பாக ஆகிவிடும். அதனால எப்போ செல்பி எடுத்தாலும் முகத்துல வெளிச்சம் படுற இடத்துல நின்னு எடுங்க.

நம்ம ஒவ்வொருவரின் முக அமைப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நம்ம முகத்துக்கு ஏற்றபடி எந்த ஆங்கிளில் போட்டோ எடுத்தா நல்லா இருக்கும் அப்படிங்கறது நம்ம தெரிஞ்சுக்கிட்டா போட்டோ எடுக்கிறப்போ நமது புகைப்படம் சிறப்பாக வரும்.

கேமராவிற்கு மிக அருகில் இருக்கக்கூடிய நமது முகத்தின் பகுதிகள் போட்டோவில் பெரியதாக தெரிவது வழக்கம். இதையே தாங்க நம்ம நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கனும். உதாரணமா மூக்கு பெரிதாக இருக்கிறவங்க அல்லது முகத்தின் கீழ் பகுதி அகலமாக இருக்கிறவங்க, நாடிப் பகுதியை கீழே தள்ளி, நெற்றிப் பகுதியை வெளியே வர மாதிரி ஆங்கிளில் போட்டோ எடுத்தாங்கன்னா முகம் ஒல்லியா அழகா தெரியும்.

அடுத்ததாக, செல்பி எடுக்கும் பொழுது மொபைல் போனை நம் உயரத்திற்கே வைத்து புகைப்படம் எடுக்காமல் சற்று மேலே தூக்கி, அதாவது டாப் ஆங்கிளில் இருந்து புகைப்படத்தை எடுத்தால் நம் முகம் அழகாக தெரியும்.

நம் கழுத்து பகுதி நீளமாக தெரியும் பொழுது நம்ம ‘லுக்கு’ சூப்பரா இருக்குங்க. அதனால் நம்முடைய கழுத்து நீண்டு தெரியும் படியாக நம்முடைய நாடியைத் தூக்கி போட்டோ எடுப்பதன் மூலமாகவும் நம்மை அழகாக காட்டிக் கொள்ளலாம்.

இயற்கையாக நாம் சிரிக்கும் பொழுது நமக்கு கிடைக்கும் அழகே வேற லெவல்லுங்க. புகைப்படம் எடுப்பதற்காக பொய்யாக சிரிக்காமல் இயற்கையாக சிரிப்பதன் மூலம் நம்முடைய புகைப்படத்தை இன்னும் வசீகரமாக மாற்ற முடியும்.

ஒரு புகைப்படம் எடுக்கும் போது நம் முகம் மட்டுமல்லாமல் நம் பின்னணியும் மனதில் கொள்ள வேண்டும். நாம் அடர்ந்த நிற ஆடையை அணியும் பொழுது வெளிர் நிற பின்னணியையும், வெளிர் நிற ஆடையை அணியும் பொழுது அடர்ந்த நிற பின்னணியையும் தேர்ந்தெடுப்பது அவசியம்.

என்ன தான் டிப்ஸ் பயன்படுத்தினாலும், நம்ம கணக்கு வாத்தியார் சொன்ன மாதிரி, 'பிராக்டிஸ்' என்பது ரொம்ப முக்கியமுங்க... சும்மா இருக்கிறப்போலாம் போட்டோ-வா எடுத்து தள்ளி நம்மளோடு 'பெஸ்ட் லுக்' எதுனு தெரிஞ்சு வெச்சுகிட்டா நம்ம வெளியில் போகும் பொழுதோ நண்பர்களுடன் புகைப்படம் எடுக்கும் பொழுதோ கலக்கிடலாமுங்க... இந்த டிப்ஸ்-அ யூஸ் பண்ணி  போட்டோஸ் எடுத்து சோசியல் மீடியாவில் 'லைக்ஸ்'-அ அள்ள வாழ்த்துக்கள்…

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe