விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் சுட்டி குட்டீசுக்கு ஒரு ஸ்பெஷல் பிரேக்ஃபாஸ்ட்...

published 10 months ago

விடுமுறை நாட்களில் வீட்டில் இருக்கும் சுட்டி குட்டீசுக்கு ஒரு ஸ்பெஷல் பிரேக்ஃபாஸ்ட்...

தினமும் காலை வேளையில் பிரேக்ஃபாஸ்ட்-க்கு என்ன ஸ்பெஷல்-னு கேட்டுட்டே எழும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க ஒரு அட்டகாசமான டிஷ் இதோ. உடலுக்கு மிகவும் நல்லதான இந்த அடையை விரைவாக செய்து விடலாம் என்பது கூடுதல் வசதி. ஆம், 15 நிமிடங்களில் நீங்கள் இந்த அடையினை தயார் செய்து சாப்பிட முடியும். இந்த பதிவில் இந்த புதுமையான ரவை அடையினை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்…

ரவை அடை செய்ய தேவையான பொருட்கள்:

வறுத்த ரவை – 1 கப்

அரிசி மாவு – 1/2 கப்

நறுக்கிய பச்சை மிளகாய் – 2

துருவிய தேங்காய் – 1 தே. கரண்டி

மஞ்சள் தூள் – சிறிதளவு

நறுக்கிய பெரிய வெங்காயம் – 1

மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

பெருங்காயத்தூள் – சிறிதளவு

உப்பு – சிறிதளவு

தயிர் – 1 கப்

ரவை அடை செய்முறை:

# ஒரு பெரிய பாத்திரத்தில் வறுத்த ரவை மற்றும் அரிசிமாவு ஆகியவற்றை கொட்டி அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய தேங்காய், மஞ்சள்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்.

#பிறகு அதனுடன், சிறிதளவு மிளகாய்த்தூள் மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

#இப்போது இவை அனைத்துடனும் 1 கப் தயிர் சேர்த்து கலக்கவும். 

#தேவையான அளவு நீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். 

#10 நிமிடம் இதனை ஊற வைக்க வேண்டும். இப்போது ரவை அடைக்கு தேவையான மாவு தயார்.

#தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி, அதை தோசை கல்லில் ஊற்றி நன்றாக வேகவைத்து எடுத்தால் சூடான மற்றும் சுவையான ரவை அடை தயார்.

இதனை தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe