Capgemini ஐடி நிறுவனத்தில் வேலை : பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!

published 5 months ago

Capgemini ஐடி நிறுவனத்தில் வேலை : பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!

Capgemini  ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.  இந்த வேலைவாய்ப்பு பிரத்யேகமாக அறிவிப்பாக அமைந்துள்ளது.  

அதன்படி தற்போது, சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணி  பெண்களுக்கானது. இதனால் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.  பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.  எம்.சி.ஏ, எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் நன்றாக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.  இந்த பணிக்கு ஆண்டு சம்பளமாக ரூ. 4 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாதம் ரூ.33,333  சம்பளம்  கிடைக்கும்.

தேர்வாகும் நபர்கள் மும்பையில் நியமனம் செய்யப்படுவார்கள்.  தேவையை பொறுத்து பிற இடங்களில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் Capgemini இணையதளத்தில் ஆகஸ்ட்  15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  

இந்த பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய லிங்கை க்ளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe