5 மேட்ச்-களில் தொடர்ந்து சதம் அடித்த நாராயண் ஜெகதீசன்: அட, கோயம்புத்தூர்-காரரா இவர்...?!

published 1 year ago

5 மேட்ச்-களில் தொடர்ந்து சதம் அடித்த நாராயண் ஜெகதீசன்: அட, கோயம்புத்தூர்-காரரா இவர்...?!

கோவை: இந்தியாவில் பலர் விரும்பி பார்க்கும் விளையாட்டு க்ரிக்கெட். உலகக் கோப்பை, டெஸ்ட் சீரீஸ், ஐபிஎல் போன்ற பல போட்டிகளை கண்டு களிப்பதும், விளையாடுவதும் நம்முள் பலரின் பொழுதுபோக்குகளில் முக்கிய அம்சம் ஆகும். நம் நாட்டு வீரர்கள் களத்தில் விளையாடும் பொழுது, நாமே நம் நாட்டிற்காக விளையாடுவது போல் உணரும் நமக்கு, நம்ம ஊர் பையன் ஒருத்தர் விளையாடுராருனா நமக்கு பெருமையா இருக்காதா என்ன... இந்த செய்தித் தொகுப்பு நம்ம கோவை-காரரான சர்வதேச க்ரிக்கெட் வீரரான நாராயண் ஜெகதீசன் பற்றியது தான்.

27 வயதான இவர் டிசம்பர் 24, 1995 அன்று பிறந்தார். வலது கை ஆட்டக்காரரான இவர் 27 அக்டோபர் 2016 அன்று 2016-17 ரஞ்சி டிராபியில் தமிழ்நாட்டிற்காக தனது முதல் தர அறிமுகத்தை செய்து, தனது முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதை வென்றார். 30 ஜனவரி 2017 அன்று 2016-17 மாநிலங்களுக்கு இடையேயான 20-20 போட்டியில் தமிழ்நாட்டின் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக அறிமுகமானார்.  மேலும், 25 பிப்ரவரி 2017 அன்று 2016-17 விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாட்டிற்கான லிஸ்ட் ஏ பட்டியலில் இடம் பிடித்தார்.

விக்கெட் கீப்பராக விளையாடும், இவர் ஜனவரி 2018-ல், 2018-ற்கான ஐபிஎல் ஏலத்தில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸால் வாங்கப்பட்டார். ஜெகதீசன் முந்தைய ஆண்டுகளில் ஐபிஎல் அணியில் இடம் பிடித்து இருந்தாலும், அவரது ஐபிஎல்-ன் அறிமுகம் சென்னை 10 அக்டோபர் 2020 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக விளையாடிய மேட்ச் ஆகும்.

ஜனவரி 2021-ல், அவர் 2020-21 சையது முஷ்டாக் அலி டிராபியில் 8 போட்டிகளில் 364 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்தவர் ஆவார். பிப்ரவரி 2021-ல், அவர் 2020–21 விஜய் ஹசாரே டிராபியில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு சதம் உட்பட 217 ரன்களுடன் தமிழ்நாட்டின் முன்னணி ரன் எடுத்தார். பிப்ரவரி 2022-ல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் அவர் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸால் வாங்கப்பட்டார்.

21 நவம்பர் 2022 அன்று, சின்னசாமி ஸ்டேடியத்தில் அருணாச்சலப் பிரதேசத்திற்கு எதிராக தமிழ்நாடு அணிக்காக நாராயண் ஜெகதீசன் 147 பந்துகளில் 277 ரன்கள் எடுத்து, லிஸ்ட் A கிரிக்கெட்டில் அதிக தனி நபர் ஸ்கோருக்கான அலி பிரவுனின் சாதனையை முறியடித்தார். ஜெகதீசன் ஆண்கள் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ந்து ஐந்து இன்னிங்ஸ்களில் சதம் அடித்த முதல் வீரர் ஆனார். 16 டிசம்பர் 2022 அன்று, அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸால் 2023 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்காக வாங்கப்பட்ட இவர், இந்திய க்ரிக்கெட்டில் தொடர்ந்து தடம் பதித்து வருகிறார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe