ராஜ குடும்பத்து மருமகனாகும் நடிகர் சித்தார்த்..! நடிகை அதிதி ராவ் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!

published 10 months ago

ராஜ குடும்பத்து மருமகனாகும் நடிகர் சித்தார்த்..! நடிகை அதிதி ராவ் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!

2017ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  நடிகை அதிதி ராவ் ஹைதாரி அறிமுகமானார். இந்த படத்தைத் தொடர்ந்து சைக்கோ, செக்க சிவந்த வானம், ஹாய் சினாமிகா என அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்தார். மேலும் இந்தி, மலையாளம், தெலுங்கு என பலத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை அதிதி ராவ், சித்தார்த்துடன் இணைந்து மஹாசமுத்திரம் என்ற படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும் சினிமா விழாக்கள், திருமண வீடு, பார்ட்டி போன்ற இடங்களுக்கு  ஜோடியாகவே சென்று வந்ததால்   இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவின.  

அதே போல நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிதி ராவுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது ஷேர் செய்வார்.  இருப்பினும் இருவரும் காதலிக்கிறார்கள் என பொதுவெளியில் அறிவித்து கொள்ளவில்லை.

இந்த நிலையில்  நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ்  நிச்சயதார்த்தம் கடந்த வாரம் நடைபெற்றது. திருமணம் நடந்து முடிந்து விட்டது என வதந்திகள் பரவிய நிலையில் இருவரின் புகைப்படத்தை மட்டும் பகிர்ந்து 'Engaged' என பதிவிட்டு இருந்தனர். இந்த ஜோடிக்கு விரைவில் திருமணமும் நடக்க இருக்கிறது.

அதிதி ஏற்கனவே 2007ல் சத்யதீப் மிஸ்ரா என்ற நடிகரை திருமணம் செய்துகொண்ட நிலையில் பின்னர் விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல  நடிகர் சித்தார்த்துக்கும் இது  இரண்டாம் திருமணம்.  மேக்னா என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து 2007ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.


நடிகை அதிதி ராவ்  ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என பலருக்கும் தெரியாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்திய விடுதலைக்கு முன் ஹைதராபாத் மாநிலத்தின் பிரதமராக இருந்த சர் முஹம்மது அக்பர் நாசர் அலி ஹைதாரி தான் நடிகை அதிதியின் தாத்தா (அப்பாவின் அப்பா) எனக் கூறப்படுகிறது.

அதேபோல அதிதியின் அம்மாவின் அப்பா, வனபர்த்தி சமஸ்தானத்தின் ராஜா ஜே. ராமேஸ்வர் ராவ் ஆவார்.  நடிகை அதிதி,  ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்ற தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe