கோவையில் திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

published 6 months ago

கோவையில் திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

கோவை: அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை  மழை பெய்த நிலையில் டீக்கடை ஒன்றின் அருகே இருந்த மரக்கிளை திடீரென முறிந்து 
விழுந்த  சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அன்னூர், பொகலூர் , கரியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இந்த நிலையில் அன்னூர் சத்தி சாலையில் உள்ள டீக்கடை ஒன்றின் முன்பு  இருந்த  மரத்தின் கிளை திடீரென முறிந்து சாலையில் விழுந்தது.

அப்போது சாலையில் வாகனங்கள் எதுவும் வராததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள் மரத்தின் கிளையை வெட்டி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில் டீக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மரத்தின்  கிளை முறிந்து திடீரென சாலையில் விழும் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி  காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/Lt1SoZtEhII

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe