கோவை வந்தது வந்தே பாரத் ரயில்

published 1 year ago

கோவை வந்தது வந்தே பாரத் ரயில்

 

கோவை: இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்  தமிழகத்தில்  சென்னை, பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 8ம் தேதி முதல் சென்னை - கோவை இடையே வந்தே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதற்கான சோதனை ஓட்டமானது இன்று நடைபெற்றது. அதன்படி காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் 11.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

 

மறு மார்க்கத்தில் பகல் 12 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் மீண்டும் சென்னையை வந்தடைகிறது. பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி துவக்கி வைத்த பின்னர் நாள் தோறும் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் பகல் 12.10 மணிக்கு சென்னை வந்தடையும். மறு மார்க்கத்தில் கோவையில் பகல் 2.20 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.30 மணிக்கு கோவை வந்தடையும்.

 

இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe