கோவையில் வெட்டி அகற்றப்படும் பனை மரங்கள்! -VIDEO

published 5 months ago

கோவையில்  வெட்டி அகற்றப்படும் பனை மரங்கள்! -VIDEO

கோவை: கோவை பெரியகுளத்தின் கரைப்பகுதியில் முறிந்து விழும் நிலையில் உள்ள பனை மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளத்தின் தெற்கு பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த கரையிலேயே பனை மரங்களும் உள்ளன. கடந்த சில நாட்களாக பனை மரம் முறிந்து குடியிருப்பின் மீது விழுவதாகவும், இதான் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 24 பனை மரங்களை வெட்டி அகற்றவும், அதற்கு பதிலாக மனு தாரர் 100 பனை மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் எனவும் தெற்கு வட்டாட்சியர் உத்தரவிட்டார்

அதன்படி, பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

இந்த செய்திக்கான வீடியோவை காணுங்கள்https://www.youtube.com/shorts/OAjGGVhduRA

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe